நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் கவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு என்பது தமிழரின் அரசியல் ஒற்றுமையை பிரதிபலிக்கும் ஒரு அமைப்பு என்பது குறித்து எந்தவிதமாற்றுக்கருத்தும் இல்லை என நான் கருதுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த ஒற்றுமை என்பது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள்ளும் இருக்கவேண்டும் என நான் எதிர்பார்க்கின்றேன் அந்த வகையிலேயே நான் பரப்பபுரை நிகழ்வுகளில் பங்கேற்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி நான் தங்களுக்கு மாத்திரமே பிரச்சாரம் செய்வது தோற்றத்தை உருவாக்கி நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் உறவை சிதைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி தேர்தல் மாவட்டங்களின் பெண் வேட்பாளர் என்ற வகையிலும் கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவை கோரும் முயற்சிக்கு தடைகள் விதிக்கப்படுகின்றது ..
பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருவரை சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள முற்படுவது வேதனை அளிக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை
சுமந்திரன், சிறிதரனுக்கு சார்பாக அவர் தேர்தல் மேடைகளில் உரையாற்றவேண்டும் எனவும் அவர்களின் வெற்றிக்காக பிரதேச மட்டங்களில் களப்பணியில் ஈடுபடவேண்டும் எனவும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சுமந்திரனின் மாணவனுமான கே.சயந்தன் உள்ளிட்டவர்கள் சசிகலாவை வற்புறுத்தி வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.