முன்னணியின் #தேசியப்பட்டியல் சம்பந்தமான கலந்துரையாடலுக்காக நேன்று 7-Aug-2020 இலங்கை நேரம் இரவு 9.30 அளவில் 8 மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கியதான முன்னணியின் பொதுக்குழு கூடி கலந்தாலோசித்து முடிவெடுத்தது.
சுமார் 3 மணி நேரம் நீடித்த பெறுமதியான கலந்துரையாடலுக்கு பின்னர் அனைத்து (8) மாவட்டங்களின் பேராதரவுடன் விசேடமாக வன்னி மாவட்டம், திருகோணமலை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அம்பாறை மாவட்டத்தின் பேராதரவுடன் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரனை தேசியப்பட்டியலினூடாக பாராளுமன்றம் அனுப்புவதற்கு ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கிழக்கு மாகாணம் மற்றும் வன்னி மாவட்டத்தை முன்னிலைப்படுத்தி எதிர்காலத்தில் தனது செயற்பாடுகளை மேற்கொள்ளவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.
இனியாவது பிரதேசவாத்தை கிளப்புவது மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு விட்டுக்கொடுப்பது என்ற வீண்பேச்சுகளையும் எழுத்துகளையும் ஞானிகள் போல் தெரிவித்து நீண்ட போராட்டத்தின் மத்தியில் மக்களின் ஆணையோடு உரிமை அரசியலை பேச வந்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியை சிதைப்பதற்கான சூனிய முயற்சிகளை கைவிடுங்கள்.