தறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு??

You are currently viewing தறுதலைகளின் கையில் தமிழ் மண் யார் பொறுப்பு??

நாடாளுமன்றத் தேர்தலின் யாழ். விருப்பு வாக்கு எண்ணலின்போது ஏற்பட்ட குழப்பங்களுக்கு மத்தியில், யாழ் மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் உள் நுழைந்திருந்தமை வெளிப்பட்டுள்ளது.


இதன்படி, சுமந்திரனுக்கு எதிராகக் கோசம் எழுப்பியவர்களில் யாழ் மாவட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் அணியின் ஆதரவாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.


இந்நிலையில், ஒரு கட்டத்தில் சிவாஜிலிங்கத்துடன் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்ட தரப்பினர், “பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம், பிரபாகரனின் மண்ணை வென்றுவிட்டோம் ஏலுமா?” என ஆவேசமாகக் கூக்குரல் எழுப்பினர்.


இதையடுத்து முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளருமான சிவாஜிலிங்கம் அவர்கள் , “கொலை காரக் கை வென்றிருக்கிறது, பிரதமரின் கை இரத்தம் தோய்ந்த கை ‘ எனக் கோசமிட்டவாறு சென்றார்.

இந்த நிலையை ஆய்வுசெய்து பார்த்தால் வாக்காளர் மீது பெரும் கோபம்தான் வியாபிக்கின்றது.

காலம் காலமாக எமை அடிமைப்படுத்தி எமது மக்களை கொன்று குவித்த பெரும்பான்மை கட்சிகளின் தரகர்களுக்கு அற்பசொற்ப ஆசைகளுக்காக தம்மை விற்றுவிட்டு அழுக்குகளை அள்ளி தங்களின் முகங்களிலும் அகங்களிலும் பூசிக்கொண்ட தமிழரை நினைத்து பரிதாபப்படுகின்றதா? அல்லது ஆத்திரபடுகின்றதா? என்ற தடுமாற்றத்தை உருவாக்கிவிட்டிருக்கின்றது.

வெட்கம் மானம் ரோசம் இல்லாத எருமைமாடுகளாக வலிசுமந்த மக்கள் கூட்டம் இருக்கும் வரை ஏமாற்றுபவன் ஏமாற்றிக்கொண்டே இருப்பான் என்பதற்கு நடந்தது முடிந்த தேர்தல் நல்ல உதாரணம் இப்படியான நக்கிப்பிழைக்கும் செயற்பாடுகளால்த்தான் 60 ஆண்டுகளுக்கு மேலாக பெரும் அழிவைச்சந்தித்தும் தமது உரிமையை விட்டுக்கொடுக்காது போராடிய விடுதலைக்கான மண் தறுதலைகளில் கையில் அகப்பட்டு தத்தளிக்கின்றது.

பகிர்ந்துகொள்ள