ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் !

You are currently viewing ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல் !

ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளன.

இதற்கு பதிலடியாக ஹமாஸ் மீது போர் அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தாக்குதல் நடத்தி வருகின்றது.

இதற்கமைய, இஸ்ரேலுக்கும், ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கும் இடையேயான போர் 3 மாதங்களுக்கு மேல் நீடித்து வருகின்றது.

இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குழு ஆதரவு அளித்து வருகின்றது.

மேலும், செங்கடல் வழியாக இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

ஈரானில் 13 பகுதிகளில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் 36 இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply