ஏவுகணைகள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு!

You are currently viewing ஏவுகணைகள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு!

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் வழங்குவது குறித்து விவாதிக்க வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்திக்க உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க வெள்ளை மாளிகை,வட அமெரிக்காவிடம் போர் ஆயுதங்களை வாங்க ரஷ்யா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறியது.

இந்த நிலையில், தலைவர்கள் அளவிலான இராஜதந்திர சந்திப்பை நடத்த வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன், இம்மாதம் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனில் நடக்கும் போருக்கான ஆயுதங்களை ரஷ்யாவுக்கு வழங்குதல் மற்றும் பிற இராணுவ ஒத்துழைப்பிற்காக வடகொரியா ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்கக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட கிம் மற்றும் புடின் சந்திப்பார்கள் என்றும், ரஷ்யா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பத்தை வழங்கினால் மட்டுமே, வடகொரியா டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு அளிக்கும் என்றும் செய்தித்தாள் கூறியுள்ளது.

அத்துடன் பியோங்யாங்கில் இருந்து கவச ரயிலில், ரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை கிம் பயணம் செய்து புடினை சந்திப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments