ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலி!

You are currently viewing ஏ9 வீதியில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் பலி!

வவுனியா, ஓமந்தை – ஏ9 வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை ஓமந்தை, பனிக்கன் நீராவி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் மீது, கூலர் (குளிரூட்டப்பட்ட) வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் பனிக்கன் நீராவி கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை

வவுனியா புளியங்குளம் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புளியங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து முல்லைத்தீவு நோக்கிச் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று, யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில், புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் சிறீலங்கா காவற்துறையினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply