ஐரோப்பாவின் செயலால் கடும் கோபத்தில் ரஷ்யா!

You are currently viewing ஐரோப்பாவின் செயலால் கடும் கோபத்தில் ரஷ்யா!

உக்ரைன் போரில் ரஷ்யாவின் போர் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க ஐரோப்பா முயற்சிக்கும் என்ற கருத்துக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கடந்த பிப்ரவரியில் தொடங்கியதில் இருந்து இதுவரை ரஷ்ய படைகள் பல்வேறு போர் குற்றங்களை செய்து வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வருகிறது.

அத்துடன் போருக்கு பொறுப்பான ரஷ்ய ராணுவம் மற்றும் அந்த நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது வழக்கு தொடர சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குமாறும் உக்ரைன் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் நேற்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen, உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிக்கவும், விசாரணை செய்யவும், ஐ.நா.வின் ஆதரவுடன் ஒரு சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சிக்கும் என்று தெரிவித்தார்.

சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen-வின் கருத்துக்கு ரஷ்யா கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த நடவடிக்கை மாஸ்கோவிற்கு “சட்டவிரோதமானது” மற்றும் “ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறிய தகவலில், ஒருவித தீர்ப்பாயத்தை நிறுவுவதற்கான முயற்சிகளைப் பொறுத்தவரை அவை சட்டபூர்வமானவை அல்ல, எங்களால் ஏற்றுக்கொள்ளப்படாது, நாங்கள் அவர்களைக் கண்டிப்போம் என தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply