“கொரோனா” பாதிப்பால், சீனாவுக்கு அடுத்தாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பாவில், ஜேர்மனி மிக நேர்த்தியான வரைமுறைகளை கடைப்பிடித்துவருவதாக பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அளவில் பெரியதும், அதிகளவில் மக்கள் தொகையை கொண்டதுமான ஜேர்மனியில், அதிகளவிலான “கொரோனா” இழப்புக்கள் ஏற்படலாமென முன்னதாக எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், 53.340 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும், மிகக்குறைந்தளவு இழப்புகளே அங்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் “Sky News” செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கொரோனா” வைரசு தொடர்பில் ஜேர்மனிய அரசு மேற்கொண்டுவரும் காத்திரமான நடவடிக்கைகளே அங்கு மிகக்குறைவான இழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதன் காரணமெனவும், குறிப்பாக பின்வரும் 4 காரணிகளே அதற்கான விளக்கமாகவும் தெரிவிக்கப்படுகிறது.
- மிக அதிகளவான மக்கள் “கொரோனா” தொற்று தொடர்பாக பரிசோதிக்கப்படுவதாகவும், குறிப்பாக வாரத்துக்கு 5 இலட்சம் மக்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் …
- “கொரோனா” வால் பீடிக்கப்பட்டவர்கள் தொடர்பான சரியான தகவல்களை வைத்திருப்பதோடு, அவர்களுக்கான வைத்திய முறைகளை மிகச்சரியாக திட்டமிட்டு செய்வதாகவும் …
- மூதாளர்களை “கொரோனா” பீடிக்காத முறையில், மூதாளர்களுக்கான பராமரிப்புக்களை வழங்குவதாகவும் …
- அவசர சிகிச்சை பிரிவுகளில், அதிகளவான நோயாளர்களை ஒரே நேரத்தில் கையாளக்கூடிய விதத்தில், தேவையான படுக்கைகளையும், மருத்துவ உபகரணங்களையும் எப்போதும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் …
தெரிவிக்கும் செய்தி நிறுவனம், இவை போன்ற காரணிகளாலேயே ஜேர்மனியில் குறைந்தளவு இழப்புகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.