ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு எரிவாயுவை கடத்திச்செல்லும் “Nord Stream 1” எனப்படும் குழாய்வழி விநியோகப்பாதை முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்ய செய்திநிறுவனமான “TASS” வெளியிட்டுள்ள தகவலின்படி, குறித்த குழாய்வழியில் கசிவு அவதானிக்கப்பட்டதால், மராமத்து பணிகளுக்காக தற்காலிகமாக எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கிவரும் நேரத்தில் எரிவாயு விநியோகம் தடைப்பட்டுள்ளமையானதை ஐரோப்பிய நாடுகள் சந்தேகத்தோடு நோக்குவதாகவும், உக்ரைன் விடயத்தில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளை பணிய வைப்பதற்கான முயற்சியாகவே ரஷ்யா எரிவாயு விநியோகத்தை வேண்டுமென்றே நிறுத்தி வைத்திருப்பதாக ஐரோப்பிய நாடுகள் கருதுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.