17.03.20 அன்று நண்பகல் 12:00 மணியிலிருந்து ஐரோப்பிய ஒன்றியமும், “ஷெங்கன்” நாடுகளும் எல்லைகளை மூடுவதாக பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.
“கொரோனா” பரவலை கட்டுப்படுத்துவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளின் சுகாதாரத்துறைகளை அதியுயர் செயற்பாட்டு நிலையில் வைத்திருப்பதற்காகவும், ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளின் இறுதியில் இம்முடிவு எட்டப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, “ஷெங்கன் / Schengen” நாடுகளான Norway, Island, Switzerland மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளும் தமது எல்லைகளை மூடுகின்றன. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளான Ireland, Romania, Kroatia, Bulgeria மற்றும் Cypres ஆகிய நாடுகளுக்கு இது பொருந்தாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஷெங்கன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பயணங்கள் தடுத்து நிறுத்தப்படுமென தெரிவித்திருக்கும் பிரான்ஸ் அதிபர், ஐரோப்பிய நாடுகளில் போர்க்கால சூழ்நிலை நிலவுவதாகவும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.