ஐரோப்பிய கால்பந்து வெற்றிக்கிண்ண போட்டிகள் (EM) ஒத்திவைப்பு?

  • Post author:
You are currently viewing ஐரோப்பிய கால்பந்து வெற்றிக்கிண்ண போட்டிகள் (EM) ஒத்திவைப்பு?

எதிர்வரும் செவ்வாய், ஐரோப்பிய கால்பந்துக்கு ஒரு முக்கிய நாளாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐரோப்பிய வெற்றிக்கிண்ண போட்டிகளை ஒத்திவைப்பதே தற்போதுள்ள நிலைமையில் சிறந்தது என்று நம்புவதாக நோர்வேயின் கால்பந்து சங்கம் தங்கள் நிலைப்பாட்டை கூறியுள்ளது.
.

ஐரோப்பிய கால்பந்து வெற்றிக்கிண்ண போட்டிகள் (EM) ஒத்திவைப்பு? 1

செவ்வாயன்று, ஐரோப்பிய கால்பந்து சங்கம் (UEFA) தொலைபேசி ஊடான ஆலோசனை மாநாடு ஒன்றை நடத்தவுள்ளது. இதில் UEFA தலைமை, 55 உறுப்பு நாடுகள் மற்றும் பங்கேற்கும் வீரர்களின் கழக பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.

இந்த மாநாட்டிற்குப்பின், UEFA தலைமை வாரியம் மேலும் ஒரு கூட்டத்தை நடத்தும் என்றும். அப்போது அங்கு திட்டமிடல் மற்றும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

ஆதாரம்/ மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள