ஐரோப்பிய தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள், தங்கள் அனைத்து உறுப்பு நாடுகளையும், பொதுவில் முகக்கவசத்தை பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய நோய் கட்டுப்பாட்டு நிறுவனம் (ECDC), நோர்வே உட்பட அனைத்து உறுப்பு நாடுகளும் தமது மக்களுக்கு முகக்கவசத்தை பரிந்துரைக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
மறுபுறம், இந்த பரிந்துரையானது நோர்வே பொது சுகாதார நிறுவனம் (FHI) விடுத்த முந்தைய ஆலோசனைகளுக்கு முரணானதாகும், ஏனெனில் முகக்கவசத்தைப் பயன்படுத்துவது தொற்றுநோய்க்கான ஆபத்தை குறைக்காது என்று அவர்கள் முன்பு கூறியிருந்தனர்.
FHI இன் துறை இயக்குனர் Line Vold, இப்பொழுது ECDCயின் பரிந்துரைக்கு ஏற்ப திரும்புவதை பற்றி பரிசீலிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மேலதிக தகவல்: VG