ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் கடமையிலிருந்துவந்த தனது நாட்டின் தூதுவர்களை உக்ரைன் பொறுப்பிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நோர்வே, ஜெர்மனி, ஹங்கேரி, செக்கியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் இதுவரை தூதுவர்களாக பொறுப்பில் இருந்து வந்தவர்கள், விசேட சட்டமொன்றின் அடிப்படையில் பொறுப்பு நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டும் அதேவேளை, இவ்வுத்தரவு, உக்ரைனிய அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கியாலேயே விடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொறுப்பு நீக்கம், உக்ரைனிய அதிபரின் உத்தரவின்பேரில் நடைபெற்றதால் அது தொடர்பாக கருத்தேதும் தெரிவிக்க முடியாதென பொறுப்பு நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தூதுவர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.