ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா! கொரோனா தாக்கத்தின் எதிரொலி!!

You are currently viewing ஐரோப்பிய நாடுகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா! கொரோனா தாக்கத்தின் எதிரொலி!!

ஐரோப்பிய நாடுகளிலிருந்து பயணப்படுபவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை 30 நாட்களுக்கு தடை செய்வதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 13.03.20 அன்றிலிருந்து நடைமுறைக்கு வரவிருக்கும் இத்தடையினால், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து யாரும் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாதெனவும், பிரித்தானியா தவிர்ந்த ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கான அனைத்து விமானப்பறப்புக்களும் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்க்கான சரியான முன்னேற்பாடுகளை அமெரிக்கா எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கொரோனா வைரஸ் பரம்பலை தடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தகுந்த நடவடிக்கைளை எடுக்க தவறி விட்டதாகவும் சாடியுள்ளார்.

இதன் காரணமாகவே ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருப்பதாக தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர், மேற்படி தடையுத்தரவை விதித்திருப்பது மிகச்சரியான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் தங்கியுள்ள அமெரிக்கர்கள் நாடு திரும்புவதானால் கடும் பரிசோதனைகளின் பின்னரேயே அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள