ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!!

You are currently viewing ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!!
ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 1
ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 2

நேற்று (18/09/2020) 15 நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம் மு.ப 9 மணியளவில் swiss நாட்டின் listal மாநகரிலே சுவிஸ் வாழ் மூன்று தமிழ் ஆதரவாளர்களுடன்இணைந்து ஏழு பேருடன் ஈருருளிப் பயணம் ஆரம்பித்து பயணித்த வேளை சுவிஸ் வாழ் தமிழீழ மக்களினால் உணவு,பானங்கள் வழிநெடுகிலும் வழங்கப் பட்டு பி.ப 6 மணியளவில் Berne ல் அமைந்துள்ள சுவிஸ் நாடாளு மன்றை வந்தடைந்தது . சுவிஸ் நாட்டின் வெளிநாட்டு வெளி விவகார அமைச்ச அலுவலகத்தினால் அறவழிப் போராளிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப் பட்டதுடன் இலங்கைதீவில் நடந்த அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுத் தர சுவிஸ் அரசும் தொடர்ந்து குரல் கொடுக்கும் என தெரிவித்து அறவழிப் போராட்டத்தினை வாழ்தியிருந்தார்கள், அதனைத்தொடர்ந்து தமிழர் இல்லத்தில் மக்கள் கலந்துரையாடல் நடைபெற்றது.

ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 3

மேலும் பேர்ண் சிவன் ஆலயத்தில் அறவழிப் போராளிகள் கௌரவிக்கப் பட்டு ஆசீர்வாதிக்கப் பட்டதுடன் அவர்களது போராட்டம் பற்றிய விளக்க உரையும் நடைபெற்று ஆலயத்தில் இரவு உணவும் வழங்கப் பட்டதுடன் ஆலயத்தின் மேல் பகுதியில் அமைந்துள்ள தமிழர் காப்பகமும் பார்வையிடப்பட்டு விளக்கமும் கொடுக்கப் பட்டது.

ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 4
ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 5

இன்று 19/09/2020 Berne மாநகரசபை முன்றலில் ஆரம்பித்து Geneva நோக்கி மனித நேய ஈருருளிப் பயணம் தொடரவுள்ளது.
நாங்கள் கடந்து வரும் வழிகளில் வாழும் உறவுகள் அனைவரையும் நடக்கும் கவனயீர்ப்பு மற்றும் சந்திப்புக்களில் கலந்து கொண்டு எமது நாட்டின் விடிவை விரைவுபடுத்த முன்வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 6
ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 7
ஐ.நாவை நெருங்கும் தமிழினவழிப்பிற்கான நீதி கேட்டு தொடரும் அறவழி மனிதநேய ஈருருளிப்பயணம்!! 8

“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

பகிர்ந்துகொள்ள