புதிய தொற்று நோயின் அபாயத்தைக் குறைப்பதற்காக, பவ்லுயிர் பெருக்கத்துக்கான ஐ.நா வின் பல்லுயிர்த் துறைத் தலைவர் உலகளாவிய ஈரமான சந்தைகளின் தடைக்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று செய்திகள் கூறுகிறது.
மேலும் ஈரமான சந்தைகள் என்று அழைக்கப்படுபவை, இறந்த மற்றும் வாழும் காட்டு விலங்குகளை மனிதர்களுக்கு உணவாக விற்கும் சந்தைகளுக்கு தடை விதிக்க உலகின் அனைத்து நாடுகளும் தயாராக வேண்டும் என்றும் எலிசபெத் மருமா மிரேமா ( Elizabeth Maruma Mrema) கூறியுள்ளார். இவர் உயிரியல் பன்முகத் தன்மை தொடர்பான ஐ.நா இன் பொதுச்செயலாளர் ஆவார்.
மேலும் அவர் கூறுகையில் பல விஞ்ஞானிகள் கோவிட் 19நோயைக் உண்டாக்கும் புதிய கொரோனா வைரஸ் ஆனது பிற காட்டு வழியாகவும் வெளவாலில் இருந்தும் மனிதர்களுக்கு தொற்றியிருப்பதாகவும் நம்புகின்றனர் என்றும் ஆனால் தற்போது எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறி இருக்கின்றார்.