ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை!

You are currently viewing ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில் இருந்து விலக அரசாங்கம் முடிவு செய்துள்ளமைக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் கவலை வெளியிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 20 மார்ச் வரை நடைபெறவுள்ள நிலையில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

30/1 தீர்மானத்திற்கு இணங்க நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் இலங்கையின் நடவடிக்கையில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது . இருப்பினும் சில நடவடிக்கைளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் இயலாமை, மனித உரிமை மீறல்களை மீண்டும் மீண்டும் தூண்டக்கூடும் .

எனவே இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் விரும்பும் அமைதியான சமுதாயத்தையும், நிலையான வளர்ச்சியையும் அடைவதற்கு தீர்மானம் 30/1 ஐ முழுமையாக அமுல்படுத்த வேண்டும்.

30/1 தீர்மானத்தில் உள்ள கடமைகள் பல தசாப்தங்களாக ஆயுத மோதல்கள், பயங்கரவாதம் மற்றும் சர்வாதிகாரத்தின் மரபுகளை வெல்ல முற்படும் அனைத்து சமூகங்களின் அபிலாஷைகளையும் பிரதிபலிக்கின்றன.

இலங்கையில் 19 வது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் பல நிறுவனங்கள் சுயாதீனமாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டுள்ளன. எனவே சித்திரவதை மற்றும் பிற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் உடனடியாக விசாரித்து வழக்குத் தொடரவும், நீண்டகாலமாக இடம்பெற்றுவரும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

பகிர்ந்துகொள்ள