ஒன்ராறியோ சட்டமன்றத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்!

You are currently viewing ஒன்ராறியோ சட்டமன்றத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு கடும் கண்டனம்!

ஒன்ராறியோ மாகாண சட்டமன்றத்தில் ஈழத் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலையை அங்கீரிக்கும் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு இலங்கை அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலத்தினால் ஒன்ராறியோ சட்டமன்றத்தில் தமிழின அழிப்பு தொடர்பாக கொண்டுவரப்பட்ட அறிவியற் கிழமைக்கான சட்டமூலம் கடந்த வாரம் சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 12ம் ஆண்டு நினைவு அடுத்தவாரம் நினைவுகூரப்படவுள்ள நிலையில் கடந்தவாரம் ஒன்ராறியோ மாகாண சட்ட மன்றம் தமிழ் இனப்படுகொலைக் கல்வி வாரம் சட்டத்தை ஏகமனதாக அங்கீகரித்திருந்தது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று கனேடிய உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினனை தனது பணியகத்துக்கு அழைத்து இது தொடர்பான கண்டனத்தை பதிவுசெய்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply