ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு குறித்து புதிய ஆய்வில் வெளியான தகவல்!

You are currently viewing ஒமிக்ரோன் வைரஸ் பாதிப்பு குறித்து புதிய ஆய்வில் வெளியான தகவல்!

டெல்டா வைரஸை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரோன் ஏற்படுத்தும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதல் முதலில் உறுதிப்படுத்தப்பட்ட Omicron வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்ததுள்ளது.

Covid19 கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றி பின்னர் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதன் பாதிப்பெ இன்னும்  குறைய நிலையில் தற்போது உருமாறிய புதிய கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.

பிரித்தானியா, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி, உள்ளிட்ட பல நாடுகளில் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. இதற்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டது. இதில் டெல்டா வகை உருமாறிய கொரோனா மற்றவைகளை விட அதிக வீரியம் கொண்டது என்று தெரிவிக்கப்பட்டது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு நாடுகளுக்கும் பரவியது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட Omicron வைரஸ் முன்பு உருமாறிய வைரஸ்களை விட மிகவும் வீரியத்துடன் இருப்பது தெரிய வந்ததுள்ளது. Omicron வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒமிக்ரோன் வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்படுமா? என்பதில் கேள்விக்குறி நிலவி வருகிறது. ஒமிக்ரோன் வைரஸ் சில நோய் எதிர்ப்பு சக்திகளை தகர்க்க கூடியது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்டா வைரஸை விட 3 மடங்கு அதிக பாதிப்பை ஒமிக்ரோன் வைரஸ் ஏற்படுத்தும் என்று புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நாட்டின் சுகாதாரத்துறை Omicron வைரஸ் தொடர்பாக சேகரித்த தரவுகள் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது. தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளின் ஆரம்ப கட்ட ஆய்வில் டெல்டா அல்லது பீட்டா வைரஸ்களுடன் ஒப்பிடும் போது Omicron வைரஸ் மீண்டும் நோய் தொற்று ஏற்படுத்தும் வாய்ப்பு 3 மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 27ஆம் திகதிலிருந்து 35 ஆயிரத்து 670 பேர் மீண்டும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 90 நாட்கள் இடைவெளியில் அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

மேலும், இதுகுறித்து தென்னாப்பிரிக்கா விஞ்ஞானி ஜூலியட் புல்லியம் கூறும்போது, “தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை Omicron எந்த அளவுக்கு தவிர்க்கிறது என்பதை இன்னும் மதிப்பிட முடியவில்லை” என தெரிவித்துள்ளார்.

அன்னேவான் கோட் பெர்க் கூறும்போது, “நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம். கொரோனா தடுப்பூசிகள் இன்னும் கடுமையான நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்று நம்புகிறோம். தடுப்பூசிகள் எப்போதுமே தீவிர நோய், வைத்தியசாலையில் அனுமதித்தல் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு எதிராக தீவிரமாகவே போராடுகிறது” என்றார்.  

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments