ஒற்றைக்கையால் ஒருபோதும் ஒசை பிறக்காது!!

You are currently viewing ஒற்றைக்கையால் ஒருபோதும் ஒசை பிறக்காது!!

மீண்டும் மீண்டும் 2009 இன் அழிவை நினைவிலிருத்தி செல்லவேண்டிய கடப்பாடுதான் காலத்தின் கட்டாயத்தில் கட்டியிழுத்து நகர்கின்றது. காரணம் தமிழ்த்தேசியம் பேசும் போலிமுகங்களின் தோற்றப்பாடும் புகழ்ச்சியின் உச்ச ஆசைகளின் ஆட்சியில் அமர்வதற்கான கீரிடங்களும் இந்த 2009 மே மாதத்தின் நடுப்பகுதியை கடந்துதான் பூதங்களாக வெளிக்கிளம்புகின்றது.


தேசியத்தலைவரின் காலத்தில் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை சிதைப்பதற்கான கோடலிகளும் இங்குதான் தோற்றம் பெறுகின்றது ஏன் இன்னும் ஒருபடி மேலே சென்று பார்த்தால் தேசியத்தலைவரால் எதிர்கால தீர்க்கதரிசனத்தோடு உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கட்டமைப்புகளின் கூறுகளாக அரசியல்காரணங்களுக்காக மறைமுகமாக இயக்கப்பட்ட சமூகக்கட்டமைப்புகளும் அதன் செயற்பாட்டாளர்கள் ஒருசிலர் இணைந்துபோகாத நிலைப்பாட்டை எடுத்ததும் அண்ணன் வந்தால் மட்டுமே கணக்கு என்ற நிலைப்பாடு எழுந்ததும் இந்தக்காலத்தில்தான் மிகவும் ஒரு சவாலான காலத்திலிருந்து மீண்டு வரும் நிலையில் வறண்ட நிலத்தில் முளைக்கும் பயிர்களாய் அவ்வப்போது முளைத்து முளைத்து காணாமல் போகின்ற சுருண்ட மனிதர்களும் விடுதலை நீரோடத்தில் கடந்து போகின்றார்கள்.


குறுநில மன்னர்களாக ஆயுள்வரை ஆட்சி செய்ய முனைந்ததால் பிரிவுகளை உருவாக்கி தமிழ்த்தேசி கட்டமைப்புகளின் திட்டமிடலுக்குள்ளும் பொருளாதார வலுவிலும் இயங்கியதையே மூடிமறைத்து முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் கதையாய் வெளிப்பரப்பில் வாய்ச்சவுடால் விடுவதும் நாளாந்த நிலைப்பாடாக நடந்தேறி வருகின்றது.


இன்று அனைத்துலக தேசிய அமைப்புகளை சிதைக்க துணியும் இந்த ஒற்றைக் கறுப்பாடுகள் எல்லாமே அனைத்துலக தேசிய கட்டமைபிற்குள் தங்களை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தி தேசிய செயற்பாட்டாளர்களாக வெளிக்காட்டியவர்கள்தான் 2009 இற்கு பின் ஆளுக்கொரு அமைப்பை உருவாக்கி மக்கள் மத்தியில் மனச்சிதைவுகளை விதையாக்கி பிரிவுகளை இலக்காக்கி தங்களை குறுநில தலைவர்களாக்க துடிப்பதும் இந்த பகல் கனவான்களே


உண்iயில் தமிழீழத்தேசியத்தலைவரையும் அவரின் தீர்க்க தரிசனத்தையும் நேசிப்பவர்கள் இப்படியான இழிய செயற்பாடுகளை செய்யமாட்டார்கள் அவரின் திட்டமிட்ட கட்டமைப்பை காயப்படுத்தமாட்டார்கள் மாறாக உள்ளே இருந்து சரிபிழைகளை பேசித்தீர்த்து ஊசிகூட உள்நுழையா வண்ணம் பலமாக வைத்திருப்பதற்கு தங்களின் அற்பணிப்பை செய்வார்கள் ஆனால் இங்கு தனிமனித வித்தைக்காரர்களாக தம்மை மிளிர வைக்க பொய்த்தேசிய மை பூசி வருகின்றவர்களே கடந்த பன்னிரு ஆண்டுகளாக தங்கள் கண்ணைத் தாங்களே குத்திக்கொண்டிருக்கின்றார்கள்.


ஆகவே அன்பான மக்களே விழிப்பாக இருங்கள் குறிப்பாக தனித்தவிலடிக்கும் தன்னல மனிதர்களை கடந்து போங்கள் இவர்களலால் ஒருபோதும் ஒசை பிறக்காது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply