தமிழ் மக்களை புதைகுழிக்குள் தள்ளிய சதிகார அரசியல் வாதிகள் (ஒட்டுக்குழுக்கள்) இன்று (28.01.2022) US ஹோட்டலில் ஒற்றையாட்சி (13) க்குள் தமிழ்த்தேசிய அரசியல் முடக்குவதற்கு ஒன்றிணைந்துள்ளார்கள்
இந்திய ஒன்றிய பிரதமர் மோடியிடம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி ஆறு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து சமர்ப்பித்த ஆவணத்திற்ககு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரின் செயற்பாட்டுக்கு எதிராக இந்த ஒட்டுக்குழு தலைவர்கள் இணைந்து தமிழ்த்தேசிய அரசியல் முடக்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்கள்.
ஒற்றையாட்சியுக்குள் முடக்கியே தீருவோம் என மீண்டும் சூளுரைத்துள்ளனர் தமிழ் மக்களின் விடுதலை அரசியலை குழிதோண்டிப்புதைக்க முனையும் 6 கட்சிகளின் தலைவர்கள்