ஒற்றை ஆட்சியை முற்றாக நிராகரிப்போம்!

You are currently viewing ஒற்றை ஆட்சியை முற்றாக நிராகரிப்போம்!

13 ஆம் திருத்தச் சட்டம் தமிழ் மக்களுக்கான எந்தவிதமான

அரசியல் உரிமைகளையும் வழங்காததுடன், அரசியலமைப்பு ரீதியாக

அதிகாரங்கள் அனைத்தும், ஜனாதிபதியிடமும், அவரால் நியமிக்கப்படும்

ஆளுனரிடமும், பராளுமன்றத்திடமும் மட்டுமே குவிந்து கிடக்கின்றது.

இதன் காரணமாகவே 1987 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கான

தீர்வு என்னும் பெயரில் கொண்டுவரப்பட்ட ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம்

திருத்தச் சட்டத்தினை தமிழ் மக்கள் அடியோடு நிராகரித்திருந்தனர்.

13ஆம் திருத்தத்தின் கீழான மாகாண சபைகள்

இனப்பிரச்சினைக்கான தீர்வாகாது:

ஒற்றையாட்சியில் இறைமை என்பது மத்திய

பாராளுமன்றத்தில் மட்டுமே தங்கியிருக்கும்.மேலும், 13 ஆம் திருத்த

சட்டமூலம் உருவாக்கும் மாகாண சபைகள், தம்மகத்தே சட்டவாக்க

தத்துவங்களை, நிறைவேற்று அதிகாரங்களையோ தனியுரிமை

சுதந்திரமாகவோ கொண்டிருக்காது. மத்திய பாராளுமன்றமும்

ஜனாதிபதியுமே மீயுயர் அதிகாரம் கொண்டவர்களாகவும், அவர்களிடமே

முழுமையுமான கட்டுப்பாடும் இருக்கும்.

தமிழ் மக்கள் மீது பாரிய இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட

நிலையிலுங்கூட 13 ஆம் திருத்தச் சட்டமானது சிங்கள மக்களுக்கும்

தமிழ் மக்களுக்கும் இடையில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதனை

நோக்கமாகக் கொண்டது என்று நம்பவைக்க முற்படுவதும் அதனை

முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென தமிழ்க் கட்சிகள்

கூட்டாகக் கோருவதும், தமிழ் மக்களை மரணப்பொறிக்குள் திட்டமிட்டுத்

தள்ளும் சூழ்ச்சியாகும்.

73 வருடங்களில் முதல் தடவையாக, ஈழத் தமிழர்களினுடைய

இறைமையை அடகுவைத்து, தமிழ் தேச மக்களை சிங்கள

பேரினவாத்திற்கு கொத்தடிமைகளாக்கும் குறித்த சூழ்ச்சியை அம்பலப்

படுத்தி, தெளிவூட்டும் வரலாற்றுக் கடமையை உணர்ந்து, புலம்பெயர்

தமிழ்த் தேசியச் செயற்பாட்டாளர்களாகிய நாம் மக்களை விழிப்பூட்டும்

பணியை முன்னெடுக்க வேண்டியது வரலாற்றுக் கடமையாகும்.

தமிழ் ஈழம் தேச அங்கீகாரமே மக்களது கோரிக்கை

கடந்த காலங்களில் பல்வேறு தேர்தல்கள் ஊடாகவும், பல

தரப்பினர்களாலும் முன்னெடுக்கப்பட்ட மக்களுடனான கலந்தாய்வுச்

செய்முறைகளுடாகவும், ஒற்றையாட்சிக்கு அப்பாற்பட்ட, தமிழ் ஈழம் தேசம்,

அதன் தனித்துவமான இறைமையும், சுயநிர்ணய உரிமையும்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் தீர்வையே வடக்கு கிழக்கு வாழ் மக்கள் மீள

மீளக் கோரி வருகின்றார்கள். எனினும் அந்த மக்களாணைகளுக்கு

மாறாக, 35 வருடங்களாக நடைமுறையிலுள்ள 13 ம் திருத்தத்தை

நடைமுறைப்படுத்தக் கோருதல் என்ற வெற்றுக் கோசத்துடன், தமிழ்

மக்களின் எதிர்காலத்தை பேரினவாத்திற்கு அடிமையாக்கும் வகையில்

தமிழ் அரசியல் கட்சிகள் முன்னெடுக்கும் சதிக்கு எதிராக விழிப்படைய

வேண்டியது அனைத்து தமிழ் மக்களதும் வரலாற்றுக் கடமையாகும்.

மேலதிகமான விபரங்கள் கிழே இணைக்கப்பட்டுள்ளது.

13 ம் திருத்தச் சட்டம் Final 13 ம் திருத்தச் சட்டம் Final

பகிர்ந்துகொள்ள

Leave a Reply