ஒஸ்லோவில் ஒழுங்கமைக்கப்படும் அனைத்து விளையாட்டுகளையும் நிறுத்துமாறு விளையாட்டுச் சங்கம் (Idrettsforbundet) இன்று புதன் இரவு செய்திக்குறிப்பு ஒன்றில் பரிந்துரை செய்துள்ளது.

ஒஸ்லோ நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட அனைத்து நிகழ்வுகளும் இப்போது மாவட்டத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும், மேலும் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களைக் கொண்ட அனைத்து நிகழ்வுகளும் தடைசெய்யப்பட்டுள்ளன, போன்ற மக்கள் கூட்டத்திற்கான விதிகளை நகராட்சி கடுமையாக்கியதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.