இன்று, ஒஸ்லோ நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் மார்ச் 16 திங்கள் முதல் மூடப்படும் என்று நகரசபை முடிவு செய்துள்ளது. இளையோர் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் மார்ச் 13 வெள்ளிக்கிழமை முதல் மூடப்படும் என்று ஒஸ்லோ நகரசபை அறிக்கை கூறுகின்றது.
மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளியில் உள்ள குழந்தைகளைக் கொண்ட பெற்றோர்கள் முடிந்தால் வெள்ளிக்கிழமை முதல் அவர்களை வீட்டில் வைத்திருக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முக்கிய தேவையுள்ள குழந்தைகளுக்கு தேவையான குழந்தை பராமரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இப்போது நாம் எடுத்து வரும் நடவடிக்கைகள் மிகவும் தொலைநோக்குடையவை என்றும், தொற்று பரவுவதைத் தடுப்பதும், எங்கள் குடியிருப்பாளர்களைப் பாதுகாப்பதும் இப்போது மிக முக்கியமான விடயம் என்றும் நகரசபைத் தலைவர் Raymond Johansen அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் பல நகராட்சிகள் வியாழக்கிழமை பள்ளிகளை மூடுவதாக தெரிவித்துள்ளன. இருப்பினும், இது இதுவரை தேசிய அளவில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!
Bergen மற்றும் Ålesund ஆகிய நகராட்சிகளும் இதே முடிவை எடுத்துள்ளன.மேலும் Nordland, Vestfold மற்றும் Telemark மேல்நிலைப் பள்ளிகளும் மூடப்படவுள்ளன.
ஆதாரம்/ மேலதிக தகவல் : Aftenposten