ஒஸ்லோ நகராட்சியில் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

  • Post author:
You are currently viewing ஒஸ்லோ நகராட்சியில் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகள்!

ஒஸ்லோ நகராட்சி கொரோனா தொற்று எச்சரிக்கை நிலையை இன்று மூன்றாக உயர்த்தியுள்ளது.

வீட்டுத் தனிமைப்படுத்தலை மீறுதல் தண்டனைக்குரியது,மற்றும் பொது நிகழ்வுகளின் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உட்பட மேலும் கடுமையான கட்டுப்பாட்டு விதிமுறைகளை ஒஸ்லோ நகராட்சி இன்று அமுல்ப்படுத்தியுள்ளது.

  • 100 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுடன் நிகழ்வுகளை நடத்துவதற்கு நகராட்சிக்கு (bydel) நிகழ்ச்சி அமைப்பாளர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஒஸ்லோவில் உள்ள தொற்று கட்டுப்பாட்டு மேலதிகாரி (Smittevernoverlegen) இன்று அறிவித்துள்ளார்.
  • 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களை கொண்ட, உள்ளரங்க மற்றும் வெளிப்புற நிகழ்வுகள் அனைத்தும் தடை செய்யப்படும்.
  • இரவு விடுதிகள், உணவு விடுதிகள், சந்திப்பு அறைகள் மற்றும் இட ஒதுக்கீடு இல்லாமல் நடைபெறும் அரங்க நிகழ்வுகள் போன்ற இடங்களில் அரங்கில் அல்லது மண்டபத்தில் உள்ள மக்கள் மத்தியில் 1 மீட்டர் இடைவெளி வைத்திருக்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும் .
  • Oslo Rådhus சுற்றுலா பயணிகள் மற்றும் நிகழ்வுகளுக்கு தற்போது மூடப்பட்டுள்ளது, மேலும் திருமணத்தின் போது விருந்தினர்களின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • ஒஸ்லோ நகராட்சியில் வசிக்கும் அனைவருக்கும் குறுந்தகவல் (SMS ) மூலம் தகவல் அனுப்பப்படும்.

இந்த நடவடிக்கைகள் செவ்வாயன்று பெர்கனில் அறிமுகப் படுத்தப்பட்ட விதிமுறைகளுக்கு ஒப்பானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் / மேலதிக தகவல் : Dagbladet

பகிர்ந்துகொள்ள