மின்சார வழங்குநரான Hafslund இன் 1300 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை இரவு மின்சாரத்தை இழந்துள்ளனர்.
இதனால் ஒஸ்லோவில் “Sagene” பகுதி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு இந்த தபால் இலக்கங்களை கொண்ட பகுதிகள் கூடுதலாக பாதிக்கப் பட்டுள்ளன: 0463, 0461, 0462, 0469 மற்றும் 0465.
பிழையை சரிசெய்ய தொழில்நுட்ப குழுவினர் தீவிரமாக பணிபுரிகின்றனர் என்று Hafslund தமது இணையதளத்தில் எழுதியுள்ளது.