வவுனியா – ஓமந்தை, பன்றிக்கெய்த குளம் பகுதியில் நேற்று (23) இடம்பெற்ற விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக அதிகரித்துள்ளது.
இதில் நால்வர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, காரைநகரைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான பார் சோமர் என்று அழைக்கப்படும் ராமலிங்கம் சோமசுந்தரம் (வயது-83), ஆறுமுகம் தேவராஜா (வயது-62), தேவராஜா சுகந்தினி (வயது-51), தேவராஜா சுதர்சன் (வயது-30) மற்றும் அவர்கள் பயணித்த வாகனத்தை செலுத்திச் சென்ற சாரதியான விஜயகுமார் ரொசாந்தன் (வயது-24) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறித்த குடும்பத்தை சேர்ந்த சோமசுந்தரம் லக்சனா (வயது-29) என்பவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
வவுனியா பன்றிகெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தின் பின் பஸ்ஸினை எரித்த சந்தேகத்தில் அந்த பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீயில் கருகிய நிலையில் இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. இதில் வான் சாரதியுமாவார்.விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவரும் அடங்கியுள்ளார். பஸ்ஸை கொழுத்தியதால் பயணித்தவர்களின் உடைமைகளும் எரிந்து சாம்பலாகியுள்ளன.வீதி விபத்தை அடுத்து வாகனங்களிற்கு தீவைத்தமை தொடர்பில் காவல்துறை வேட்டையினை தொடங்கியுள்ளது.சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,காணொளிகள் பிரகாரம் இருவர் கைதாகியுள்ளதுடன் பலரை தேடி வருகின்றது.இதனிடையே எரிந்த வாகனங்களிலிருந்து எரியுண்ட நிலையில் சடலங்கள் இரண்டு மீட்கப்பட்டுள்ளது.அவர்கள் முன்னதாகவே மரணித்தனரா அல்லது தீயினால் மரணித்தனாராவென்ற சந்தேகம் வலுத்துள்ளது.