ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசரை சாதான எஸ்.ஜ.விசாரிப்பதா-விக்னேஸ்வரன் சீற்றம்!
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசரை கேள்விகள் கேட்கவேண்டும் என்றால் காவல்துறையில் எஸ்.பி. அல்லது ஏ.எஸ்.பி தரத்தில் உள்ள காவல்துறை அதிகாரியால்தான் கேள்வி கேட்கவேண்டும் சாதாரன காவல்துறை உத்தியோகத்தரை விசாரிக்க அனுப்பியது பிழை இந்த தருணத்தில் இதனை பற்றி கேட்கவேண்டிய அசியம் இல்லை இது ஏதேஒரு விதத்தில் தேர்தலுக்கு முன்னர் பயமுறுத்துவது போன்று தெரிகின்றது என்று விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனிடம் பொலிஸ் தலைமையக பொலிஸார் நேற்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
யாழிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 9 மணி முதல் 2 மணித்தியாலங்கள் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஊடகங்களுக்கு அனுப்பப்பட்ட வாராந்த கேள்வி பதில் அறிக்கையில் சர்ச்சைக்குரிய கருத்தொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அது தொடர்பிலேயே விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்தார்