இன்று புதன், ஒஸ்லோவில் Kværnerbyen பகுதியிலுள்ள Kværnerdalen மழலையர் பள்ளியில், கோவிட் -19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்று மழலையர் பள்ளி பெற்றோர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளியானது, மாவட்ட மருத்துவ மேலதிகாரிகளுடன் இணைந்து, பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்டவருடன் யார் யாருக்கு நெருங்கிய தொடர்புகள் இருந்திருக்கலாம் என்று மதிப்பீடு செய்துள்ளது. இது «Kumlokket» தளத்தில் உள்ள குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். மேலும், இந்த அலகுடன் தொடர்புடைய ஒரு சில ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
«Kumlokket» 3-6 வயதுடைய குழந்தைகளைக் கொண்டுள்ளது என்று ஒஸ்லோ நகராட்சியின் வலைத்தளம் தெரிவித்துள்ளது. இந்த அலகுடன் தொடர்புடைய குழந்தைகள் மற்றும் ஊழியர்கள் இப்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
மேலும், மழலையர் பள்ளியின் பிற தளங்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும், ஆனால், மற்றைய பிரிவு குழந்தைகள் அல்லது ஊழியர்கள் அறிகுறிகளை சந்தித்தால், அவர்கள் வீட்டிலேயே தங்கி, சுகாதார பராமரிப்பு முறை சோதனைக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.