ஓஸ்லோவில் மின்சார வாகனங்களுக்கான இரட்டிப்பு BOM கட்டணஉயர்வு ஒத்திவைப்பு!

  • Post author:
You are currently viewing ஓஸ்லோவில் மின்சார வாகனங்களுக்கான  இரட்டிப்பு  BOM  கட்டணஉயர்வு ஒத்திவைப்பு!

ஒஸ்லோபொதி 3 இன் மூன்றாம் படி, மார்ச் 1 இலிருந்து ஜூன் 1 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, கட்டண அதிகரிப்புடன் மூன்றாம் படி எப்போது செயல்படுத்தப்படும் என்பது இப்போது தெளிவாகத் தெரியவில்லை.

– படி 3 ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூன் 1 ஆம் திகதி செயல்படுத்தப்படாது என்று நோர்வே பொது சாலைகள் நிர்வாகத்தின் வலைத்தளமான Motor இல் ஒஸ்லோபொதி செயலகத்திலிருந்து “Kyrre Gran” உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜூன் 1 ம் தேதி மின்சார வாகனங்களுக்கான கட்டண அதிகரிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தாமதத்திற்கு காரணம், OSLO நகராட்சி, Viken மாவட்டசபை மற்றும் அரசுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்னும் முற்றுப்பெறவில்லை, மேலும் அரசியல்வாதிகளும் கட்டணங்களின் கூர்மையான அதிகரிப்பை ஏற்கவேண்டும் என்றும் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. (NTB)

பகிர்ந்துகொள்ள