தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை பிணையில் விடுவிக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,இன்று காலை கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்தே அவர் செய்யப்பட்டார். இந்தநிலையில், கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்தில் இன்று மாலை 5.30 மணியளவில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.
.jpg)
.jpg)