திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான கொலை முயற்சியை ஈழத்தமிழர் பேரவை – ஐ.இரா. மிகவன்மையாகக் கண்டிக்கிறது.
யூன் 2ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலைமுயற்சி பற்றி உங்களது கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின் படி இன்று வடமராட்சிக் கிழக்குப் பிரதேசத்தில் மக்கள் சந்திப்பினை மேற்கொண்டிருந்த திரு.கஜேந்திரகுமார் அவர்கள் மீது உந்துருளியில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு முயன்றுள்ளனர். அங்கு திரண்டிருந்த மக்கள் இவ்விருவரையும் துரத்திப்பிடிக்க முயன்றபோது ஒருவர் தப்பியோடிவிட மற்றவர் பிடிக்கப்பட்டார். பிடிபட்ட நபர் தன்னை சிறிலங்கா பாதுகாப்புப் படைகளின் உளவுப்பிரிவைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்தியுள்ளார்.
திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் மீதான கொலை முயற்சியை ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராச்சியம் மிகவன்மையாகக் கண்டிப்பதுடன், இவ்வாறான சனநாயக விரோதமான மனிதவுரிமை மீறல்களுக்கு இடமளிக்கவேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு அழுத்தங்கொடுக்குமாறு சிறிலங்காவிற்கு உதவும் நாடுகளைக் கோருகிறது.
ஈழத்தமிழர் பேரவை – ஐ.இரா. ஊடக அறிக்கையின் ஆங்கில வடிவம் :-
English Format of Media Statement :-
Press Release
02 June 2023
CET-UK strongly condemns the attempted murder of Hon MP G Ponnambalam
This is to draw your attention to the attempted murder of Mr. Gajendrakumar Ponnambalam, Member of Parliament for Jaffna district and leader of the Tamil National People’s Front, which took place on Friday, June 2nd.
It is reported that Mr. Ponnambalam attended a public meeting at Vadamardchi East in the Jaffna district when two unidentified people came in a motorcycle and attempted to shoot him with a pistol. When the people chased them, one was captured and the other escaped. It was identified by the person who was in custody that he was associated with Sri Lankan forces’ intelligence unit.
Council of Eelam Tamils – United Kingdom strongly condemns the attempted murder of Mr. Gajendrakumar Ponnambalam and requests Sri Lanka’s international partners to send the message loud and clear that they can’t support an administration that tramples on the rights of its people.