கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்!

You are currently viewing கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்!

கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள் என்று இத்தாலி தேசிய மருத்துவ கூட்டமைப்பு (Federazione nazionale degli ordini dei medici) இன்று அறிவித்திருக்கிறது. மருத்துவர்களின் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது, இதில் 50 வீதமானவர்கள் குடும்ப மருத்துவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு துறையின் பொறுப்பாளர் Borrelli தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்

கடந்த நாட்களில் 7 மருத்துவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள்! 1

சிவில் பாதுகாப்பு துறையின் பொறுப்பாளர் Borrelli காய்ச்சல் மற்றும் சுகயீனம் காரணத்தால் வழமையாக புள்ளிவிபரங்களை சமிர்ப்பிற்கும் பத்திரிக்கை சந்திப்பில் அவர் கலந்துகொள்ளவில்லை.

COVID-19 ற்கான பரிசோதனையின் முடிவுகள் வெளிவரும் வரை அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், சிவில் பாதுகாப்பு துறை தொடர்ச்சியாக புள்ளிவிபரங்கள் மற்றும் நிலவரங்களை பகிர்ந்து கொள்ளுவார்கள் என்று உறுதியளித்தார்கள்.

சீனாவில் இருந்து உதவிகள்

சீனாவில் இருந்து உதவிகள்

இன்று சீனாவில் இருந்து மூன்றாவது மருத்துவ அணி வந்து சேர்ந்துள்ளது. அணியுடன் 8 ton மருத்துவ உபகரணங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில்:

  • 30 சுவாச இயந்திரங்கள் (ventilatori meccanici);
  • 20 monitor set;
  • 300.000 முகக் கவசங்கள் (mascherine);
  • 20.000 N95 முகக் கவசங்கள்.

நன்றி- தமிழர் தகவல் மையம்-இத்தாலி

பகிர்ந்துகொள்ள