கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்துள்னர்
அஞ்சல் வீதி அம்பிளாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த (38) வதுடைய பரமானந்தம் மயூரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரியும் குறித்த நபர் சம்ப தினத்தன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் மூன்று சீட்டுக்களை எழுதி தனது மரணத்தை தெரிவு செய்திருந்தார் அதில் பாலத்தில் பாய்தல்,வீட்டில் இறப்பது,தூக்கிட்டு மரணிப்பது என்ற தெரிவுகளில் தனது வீட்டு அறையில் உள்ள மீன் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார் அவர் தனது நாள் குறிப்பு புத்தகத்தினுள் தனக்கு கடன் சுமை உள்ளதாகவும் கடிதமொன்றை எழுதி வைத்திருந்ததாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.குறித்த நபரின் மனைவி ஒரு தாதிய உத்தியோகத்தர் என்பதும் குறிப்பிடதக்கது.
மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்ர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.; கொக்கட்டிச்சோலை சிறீலங்கா காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.