திருமலை கடற்பரப்பின் ஊடாக 13.02.1996 அன்று விநியோக நடவடிக்கையின்போது இந்திய – சிறிலங்கா கடற்படையினரால் விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பல் வழிமறிக்கப்பட்டு ஏற்பட்ட மோதலில் நடத்தப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப். கேணல் தோழைநம்பி, கடற்கரும்புலி மேஜர் வேங்கை உட்பட ஏனைய மாவீரர்களின் 24 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலைப்புலிகளின் ஆயுத பலத்தை அதிகரிக்கும் நோக்கோடு 12.02.1996 அன்று முல்லைத்திவை நோக்கி வந்துகொண்டிருந்த வேளை திருகோணமலைக்கு உயர்வாக 70 கடல்மைல் தொலைவில் வைத்து இந்தியக் கடற்படையால் மறிக்கப்பட்டு சிறிலங்காக் கடற்படையிடம் கையளிக்கப்பட்டது.
கடற்புலிகளின் அணிகள் சென்று கப்பலில் இருந்த சில தளபாடங்களையும் , மாலுமிகளையும் மாற்றி எடுத்துக்கொண்டு அந்த கப்பலில் கடற்கரும்புலிகள் லெப். கேணல் தோழைநம்பி, மேஜர் வேங்கை உட்பட கடற்புலி மேஜர் இலங்கேஸ்வரன் மூவருமாக முல்லைத்தீவு நோக்கி கப்பலை நகர்த்திக்கொண்டிருந்த தருணத்தில் ஏற்பட்ட சில மணித்தியால கடற்சமரின் பின் முல்லைத்திவிற்கு 26 கடல்மைல் தொலைவில் வைத்து சிறிலங்காப் படையினரின் விமானப்படையின் இரண்டு “புக்காரா” விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில் கடற்கரும்புலிகள் உட்பட கடற்புலி மறவர்கள் கடலிலே காவியம் படைத்தனர்.

கடற்கரும்புலி லெப்.கேணல் மதன் (சோலைநம்பி)
யோகச்சந்திரன் ரதீஸ்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996

கடற்கரும்புலி மேஜர் வேங்கை
சூசைப்பிள்ளை செல்வக்குமார்
பொலிகண்டி, வல்வெட்டித்தறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.02.1996
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!