கடித்த நாகப்பாம்பை பிடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த 15 வயது சிறுவன் – சாவகச்சேரியில் சம்பவம்!

You are currently viewing கடித்த நாகப்பாம்பை பிடித்துக்கொண்டு வைத்தியசாலைக்கு வந்த 15 வயது சிறுவன் – சாவகச்சேரியில் சம்பவம்!

யாழ்.சாவகச்சேரியில் நாக பாம்பு கடிக்கு இலக்கான 15 வயது சிறுவன் நாக பாம்புடன் வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.சாவகச்சேரி நுணாவில் பகுதியில் 15 வயதான குறித்த சிறுவன் நண்பர்களுடன் வயலுக்கு சென்றிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த சிறுவனும் அவனுடைய நண்பர்களும் இணைந்து கடித்த பாம்பை பிடித்து போத்தலில் அடைத்துக் கொண்டு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர்.இதன்போதே சிறுவனை கடித்தது நாக பாம்பு என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பாம்புக்கடிக்கு இலக்கான சிறுவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சை பெற்றுவருக்கின்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply