வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் நேற்று இரவு மூன்று மீன்பிடி வாடிகள் தீ பரவியுள்ளது. குறித்த வாடிகள் தீயில் எரிவதை பார்த்த மீனவர்கள் அதை அணைக்க முற்பட்ட முயற்சியும் தோல்வியில் முடிய மூன்று வாடிகளும் முற்றாக தீரியில் எரிந்துள்ளன.
சிறு தொழிலாளர்களின் பல இலட்சம் பெறுமதியான வலைகளும் குறித்த வாடிகளில் இருந்ததாகவும் அவர்களுடைய வலைகளும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
செல்வா, மரியசீலன், ராசன் ஆகிய மீனவர்களின் வாடியே தீயில் எரிந்துள்ளது. அவர்கள் பயன்படுத்தி வந்த வலைகளும் ஏனைய மீனவர்கள் பாதுகாப்பிற்காக வைத்த வலைகளும் தீயில் எரிந்துள்ளது.