



தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினரும் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினருமான இ.செந்தூரன் அவர்களின் திடீர் மறைவுச் செய்தி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செந்தூரன் அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கான அரசியல் பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தன்னை முழுமையாக அற்பணித்து உழைத்தவர்.
உறுதியான தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரான செந்தூரன் அவர்களின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது தமிழ்ச் சமூகத்திற்கும் எமது கட்சிக்கும் ஈடு செய்யப்பட முடியாத பேரிழப்பகும்.
செந்தூரனின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்காறோம்.
தமிழ்த் தேசத்தின் அற்பணிப்பு மிக்க செயற்பாட்டாளன் செந்தூரனிற்கு எமது கண்ணீர் வணக்கத்தினை காணிக்கையாக்குகின்றோம்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்