கனடாவில், புதிய அமைச்சரவையில் பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படக் கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது. கனேடிய இராணுவத்தில் பாலியல் முறைகேடு குறித்து ஆய்வுகளை மேற்கொண்ட நிபுணர்கள் இது தொடர்பான கோரிக்கையை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வலியுறுத்தியுள்ளனர்.
னேடிய ஆயுதப்படைகளுக்குள் பாலியல் முறைகேடுகள் குறித்த நெருக்கடிகளை தீர்ப்பது தொடர்பான விடயத்தில், பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார் என்ற அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனவே பெண் ஒருவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு இதுவே சரியான தருணம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கனேடிய அரசாங்கத்தில், 1993ஆம் ஆண்டு, முதல்முறையாக பாதுகாப்பு அமைச்சராக கிம் கம்பெல் பதவி வகித்திருந்தார். ஆறு மாதங்களே அவர் அந்தப் பதவியில் இருந்தார். அதற்குப் பின்னர் பெண்கள் எவரும் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வகிக்கவில்லை