அதிக வெப்பநிலை பதிவாகிய ஒருவாரத்தில் 719 எதிர்பாராத திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளதாக, பிரிட்டிஷ் கொலம்பியா தலைமை மரணவிசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார். இது வழக்கமாக ஏற்படும் மரணங்களை விட மூன்று மடங்கு அதிகமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
இறந்தவர்களில் பலர் வயதானவர்கள் என்றும் குளிரூட்டி வசதி இல்லாமல் தனியாக வசித்து வந்தவர்கள் என்றும் தெரிவித்துள்ள தலைமை மரணவிசாரணை அதிகாரி, மேலதிக மரண விசாரணை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.