உலக கருணை தினம் என்பது ஒருவருக்கு ஒருவர் கருணை காட்டுவதன் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் ஒரு உலகளாவிய நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 13ஆம் திகதி கொண்டாடப்படும் இந்த நாளில், கனேடியர்கள் சர்வதேச அளவில் அருமையாக பழகக்கூடியவர்கள் என்று இந்த தரவரிசைப்பட்டியல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில், நியூசிலாந்து முதலிடத்தையும், அவுஸ்திரேலியா இரண்டாவது இடத்தையும், கனடா மூன்றாவது இடத்தையும் வகிக்கின்றன.
ஒரு நாட்டின் மருத்துவ சேவை, குறைந்தபட்ச ஊதியம், வெளிநாட்டவர்கள் சந்திக்கும் அனுபவங்கள் மற்றும் உலக சமாதான தரவரிசைப் பட்டியலில் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப்பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
கனடா, உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் உயர்ந்த இடத்தைப் பிடிப்பதற்கு, உலகிலேயே நன்கு பழகக்கூடியவர்களைக் கொண்ட நகரமாக வான்கூவர் சமீபத்தைய ஆய்வு ஒன்றில் தேர்வுசெய்யப்பட்டதும் ஒரு காரணமாகும். (மொன்றியல் அந்த பட்டியலில் 34ஆவது இடத்தைப் பிடித்திருந்தது)
ஆனால், உலகிலேயே கருணை மிகுந்த நாடுகள் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் வந்த டென்மார்க் மற்றும் நெதர்லாந்தையும், அவற்றைப் பின்தொடர்ந்து வந்த ஜேர்மனி, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளையும் கனடா மிஞ்சிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.