கல்லடி பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம்!

You are currently viewing கல்லடி பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம்!

மட்டக்களப்பு- கல்லடி பாலத்திற்கு அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது இன்றையதினம்(26.3.2026) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு வாவியில் சடலம் ஒன்று மிதப்பதைக்கண்டு அவற்றினை கடற்றொழிலாளர்களின் உதவியுடன் கரைக்கு சடலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

45வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபரின் மோட்டார் சைக்கிளும் கல்லடி பாலத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கல்லடி பாலத்திலிருந்து குதித்திருக்கலாம் எனவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக  சிறீலங்கா காவற்தறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply