களியாட்டங்களைத் தவிர்ப்போம்! அமைதியைக் கடைப்பிடிப்போம்!

You are currently viewing களியாட்டங்களைத் தவிர்ப்போம்! அமைதியைக் கடைப்பிடிப்போம்!

மாவீரர் வாரம் என்பது வெறும் நினைவுகூரும் வாரம் மட்டுமல்ல; எமது மண்ணுக்காக பல்லாயிரம் மாவீரர்கள்  உயித்தியாகம் எய்திய உணர்வுகளின் கூட்டு நினைவுகூரல்,உயிரை இழந்தவர்களின் தியாகங்களையும், அவர்களின் குடும்பங்கள் சுமக்கும் வலிகளையும் நினைவுகூர வேண்டிய உணர்வுபூர்வமான காலமாகும்.

எமது மண்ணின் வரலாற்றில் பல துயரங்களும், இழப்புகளும், கண்ணீரும் நிறைந்திருக்கின்றன. அந்த வரலாற்றின் ஒரு பகுதியாகத் தமது உயிர்களை இழந்தவர்களை நினைவுகூர்வது எமது மனிதநேயக் கடமையாகும். அவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் அவர்களின் குடும்பங்களின் துயரங்களையும், அவர்கள் அனுபவித்த இழப்புகளையும் நாம் மறந்துவிடக் கூடாது.

இது களியாட்டங்களுக்கும் கொண்டாட்டங்களுக்கும் உரிய காலமல்ல. மாறாக, அமைதியாகவும் மரியாதையுடனும் கடந்த காலத்தை நினைவுகூர வேண்டிய காலம். எனவே, இந்த வாரத்தில் தேவையற்ற கொண்டாட்டங்கள், கேளிக்கைகள் மற்றும் ஆரவாரங்களைத் தவிர்த்து, நினைவேந்தலின் உண்மையான அர்த்தத்தை உணர்ந்து செயல்படுவோம்.

மாவீரர் வாரம் நமக்குச் சொல்லும் மிக முக்கியமான செய்தி, உயிரின் மதிப்பையும், மண்ணின் மீதான பற்றையும், மனிதநேயத்தையும், அமைதியின் அவசியத்தையும் உணர்வதாகும்.

நினைவுகள் அழிவதில்லை; வரலாறு மறைவதில்லை; இழப்புகளின் வலியும் மறக்கப்படுவதில்லை.

களியாட்டங்களைத் தவிர்ப்போம். அமைதியைக் கடைப்பிடிப்போம். நினைவுகளைப் போற்றுவோம். தியாகங்களை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம்,அவர்கள் கண்ட கனவுக்கு பலம் சேர்ப்போம்!

வீரவணக்கம்! 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply