காசாவில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்!

You are currently viewing காசாவில் ஆம்புலன்ஸ் மீது இஸ்ரேல் தாக்குதல்!

காசாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து வெளியேறிய ஆம்புலன்ஸ் கான்வாய் மீது இஸ்ரேல் தாக்கியதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா நகரின் பிரதான மருத்துவனையில் பலத்த காயமடைந்த பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்காக காத்திருந்த ஆம்புலன்ஸ் கான்வாய் மீது இஸ்ரேலிய விமானம் தாக்குதல் நடத்தியதாக காசாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதில் டஜன் கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இதுகுறித்து சுகாதார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அஷ்ராஃப் அல்-கிட்ரா கூறுகையில்,

‘அல்-ஷிஃபா மருத்துவமனையின் கதவுக்கு வெளியே ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆக்கிரமிப்பு கான்வாய் இலக்கு வைக்கப்பட்டது’ என்றார். எனினும், இச்சம்பவத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த புள்ளிவிவரத்தை அவர் தெரிவிக்கவில்லை.

இந்தத் தாக்குதல் தொடர்பாக வெளியான வீடியோவில் ஆம்புலன்ஸ் கடுமையாக சேதமடைந்துள்ளதும், நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதும் காட்டப்பட்டுள்ளது. ஆனால், காசாவின் சுகாதார அமைச்சகத்தின் தாக்குதல் தொடர்பான அறிக்கையை ஆராய்ந்து வருவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை

காசா நகரின் வடக்கே, சஃப்தாவி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒசாமா பின் ஜெய்த் பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காசாவில் உள்ள அல்-ஷிஃபா, அல்-குத்ஸ் மற்றும் இந்தோனேசிய ஆகிய மூன்று மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து காயமடைந்த பாலஸ்தீனியர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டி மீது இஸ்ரேல் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேல், இதுவரை காசாவில் 9,227 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது, இதில் கிட்டத்தட்ட 3,826 குழந்தைகள் மற்றும் 2,045 பெண்கள் உள்ளனர், மேலும் 23,516 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீன சுகாதார அமைச்சின் அறிக்கைகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று கூறுகின்றன

பகிர்ந்துகொள்ள

Leave a Reply