காசாவின் வடக்கு பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் பள்ளி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் இதுவரை 12,300 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், காசாவில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10,812 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலிய போர் விமானங்கள் காசாவின் வடக்கு பகுதியில் உள்ள 6 மருத்துவமனைகள் மற்றும் ஒரு பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல் மற்றொரு மருத்துவமனையில் தரைவழிப் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், காசாவின் பாரிய மருத்துவமனையான அல்-ஷிஃபாவின் முற்றத்தில் அதிகாலையில் ஏவுகணை தாக்கியதாகவும், இந்தோனேசிய மருத்துவமனை ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல் நாசர் ராண்டிசி குழந்தைகள் புற்றுநோய் மருத்துவமனைக்கு தீ வைத்ததாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.