காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
சர்வதேச மகளிர் தினமான இன்று சர்வதேச மகளிர் தினத்தை துக்க தினமாக அனுஷ்டித்து, சர்வதேச விசாரணையை கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
முல்லைத்தீவு நகரிலிருந்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெருமளவானவர்கள் இன்றைய போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் 2017-03-08 ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மூன்று வருடங்களை கடந்து, நான்காவது வருடம் ஆரம்பிக்கின்ற இன்றைய நாளில் குறித்த போராட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


