காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு கடிதம்!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு கடிதம்!

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஜோ பைடனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே இவ்வாறு தெரிவித்திருந்தனர். 

மேலும் அவர்கள் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நீங்கள் பெற்ற உற்சாகமான வெற்றியை வாழ்த்துவதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறோம்.

வவுனியாவைச் சேர்ந்த தமிழ் தாய்மார்கள் நாங்கள். இலங்கை ஆட்சியின் கொடுமையால் காணாமல் ஆக்கப்பட்ட  எங்கள் குழந்தைகளை தேடுகிறோம்.

நன்கு அனுபவம் வாய்ந்த, பரிவுணர்வுள்ள ஒருவர் சுதந்திர உலகின் தலைவராக இருப்பதற்காக நாங்கள் காத்திருந்தோம் .

இறுதியாக அமெரிக்காவும் உலகின் பிற பகுதிகளும் உங்களை எங்கள் தலைவராகப் பெறுகின்றன.

பகிர்ந்துகொள்ள