
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களது போராட்டத்தில் இணைந்து தனது மகனைத் தேடி போராடிய தந்தை ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
முதலாம் வட்டாரம், கைவேலி, 50 வீட்டுத்திட்டம் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொன்னையா நாகராசா என்ற தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த தந்தை தன்னுடைய மகனான நாகராசா பிரதாஸ் (காணாமல் போனபோது வயது-18) என்பவரை 2009.3.23ஆம் திகதி பொக்கணை பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தொடர்ச்சியாக மகனைத் தேடி அனைத்து போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார்.
ஒரு மகளை நாட்டுக்காக கையளித்து விட்டு மற்றைய மகனையும் தொலைத்த குறித்த தந்தை பல்வேறு இன்னல்களுடனும் ஏக்கங்களுடனும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை தேடி தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களை வடக்கு கிழக்கு எங்கும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.