காணாமல் போனோர் பிரச்சனையினை சர்வதேசத்திற்கு காட்ட அனைவரும் அணிதிரளவேண்டும்-முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள்!
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியான போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் இன்னிலையில் இன்று (19.08.2020) ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார்கள்.
மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி கருத்த தெரிவிக்கையில்.
புதிய அரசு வந்துள்ளது அதன் பின்னர் அந்த அரசின் நிலைப்பாடு என் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும் 11 ஆண்டுகளாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களை தேடிக்கொண்டிருக்கும் இந்த நிலையில் புதிய அரசாங்கமாக வந்தவர்களிடம் எங்கள் உறவகளை கையளித்தோம் அவர்களால்தான் எங்களின் பிரச்சனைக்கான முடிவுகள் எடுக்கமுடியும் இதற்கான பதிலும் தரமுடியும் இனி எந்த ஒருவரையும் சாட்டாக கதைக்க முடியாது.
ஆனால் இவர்களால் எங்களுக்கான தீர்வினை தரமுடியாது என்பதையும் நாங்கள் எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து எங்களுக்கான உண்மையா நீதி கிடைக்கவேண்டும்.
போர் முடிவடைந்த காலப்பகுதியில் எத்தனையோ குடும்பங்களாக கையளித்த சாட்சியங்களாக வைத்து போராடிக்கொண்டிருக்கின்றோம்
இந்த அரசில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் அன்று ஆட்சியில் இருக்கம் போதே அவர்களிடம் தான் எங்கள் உறவுகளை ஒப்படைத்தோம்
எதிர்வரும் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட நாளில் எங்கள் பிரச்சனையினை சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவேண்டும் என்பதற்காக நாங்கள் எங்கள் உறவுகளை கொடுத்த அரசு ஆட்சியில் இருப்பதால் அவர்களிடம் இருந்து சர்வதேசம் நீதியினை பெற்றுத்தரவேண்டும் என்பதற்காகவும்,பாராளுமன்றம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் எங்கள் உறவுகளை மீட்டுத்தரவேண்டும் எங்களுக்காக குரல்கொடுக்கவேண்டும்.
வடக்கில் ஜந்து மாவட்டங்களை உள்ளடக்கி யாழ்ப்பாணம் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து கச்சேரி நோக்கி போராடவுள்ளோம் இதில் அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு காணாமல் போனவர்களுக்கான நீதி வேண்டும் என்று கோரி நீதி பெற்றுத்தரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.