காதலித்ததால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற குடும்பத்தினர்!

You are currently viewing காதலித்ததால் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொன்ற குடும்பத்தினர்!

இந்திய மாநிலம் மகாராஷ்டிராவில் மருத்துவ மாணவி ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட் மாவட்டத்தின் மகிபால் கிராமத்தைச் சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த் (22). ஹோமியோபதி மருத்துவத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த சுபாங்கிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஆனால், வேறொருவரை காதலிப்பதாக பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையிடம் சுபாங்கி கூறியுள்ளார். இதன் காரணமாக திருமணம் நின்றதால் சுபாங்கியின் குடும்பம் கோபமடைந்தது.

அதன் பின்னர் மாணவி சுபாங்கி மாயமானார். இதுகுறித்து சந்தேகமடைந்த சிலர் மாணவியை காணவில்லை என பொலிஸாரிடம் புகார் தெரிவித்தனர்.

மாணவியின் குடும்பத்தினரை பொலிஸார் விசாரித்தபோது அதிர்ச்சி உண்மை வெளியானது.

சுபாங்கியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவியின் குடும்பத்தினர், கடந்த மாதம் 22ஆம் திகதி அவரை வயலுக்கு அழைத்துச் சென்று கயிற்றினால் கழுத்தை நெரித்து கொன்றனர்.

பின்னர் அவரது உடலை எரித்து அங்கு இருந்த கால்வாயில் சாம்பலை கரைத்துள்ளனர். இதனையடுத்து மாணவியின் தந்தை ஜனார்தன், அண்ணன் கேசவ், மாமா கிரிதர் உள்ளிட்ட ஐந்து பேரை பொலிஸார் கைது செய்தனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply